ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் 4வது பேட்ஸ்மேனாக இறங்கி அதிக ரன்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தி விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், விராட் கோஹ்லி 499 ரன்கள் குவித்துள்ளார்.
அதில் 3 சதங்கள், ஒரு அரை சதம் ஆகியவை அடங்கும். ஆறு இன்னிங்சுகளில் ஆடியுள்ள கோஹ்லியின் பேட்டிங் சராசரி 83.16 ஆக உள்ளது.
2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சுகளில் சச்சின் டெண்டுல்கர் 480 ரன்கள் எடுத்திருந்ததே அந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் ஒன்றில் 4வதாக களமிறங்கி எதிர்தரப்பு நாட்டு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இப்போது கோஹ்லி அதை முறியடித்துள்ளார். சிட்னியில் இன்னுமொரு டெஸ்ட் பாக்கியுள்ளது என்பதால், கோஹ்லி எளிதாக 500 ரன்களை கடப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக 1977-78ல் குண்டப்பா விஸ்வநாத் 9 இன்னிங்சுகளில் 473 ரன்களும், மேற்கிந்திய தீவுகளின் லாரா 8 இன்னிங்சுகளில் 466 ரன்களும், இங்கிலாந்தின் கென் பாரிங்டன் 8 இன்னிங்சுகளில் 464 ரன்களும் எடுத்திருந்தனர்.

No comments:
Post a Comment