Wednesday, December 31, 2014

ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, ‘வை ராஜா வை’ என இப்போது அடுத்தடுத்து விவேக் கைவசம் படங்கள். ஒரு பக்கம் ரீ என்ட்ரி ஹேப்பி... இன்னொரு பக்கம் புதிதாகக் கிடைத்திருக்கும் ‘டாக்டர் பட்டம்’ என டபுள் குஷியில் இருக்கிறார் மனிதர்!

 ‘‘சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும்போது, ‘சமூக அக்கறையுள்ள கருத்துக்களை 25 வருஷமா படங்கள்ல சொல்லியிருக்கீங்க, கிரீன் குளோப் அமைப்பு மூலமா இதுவரை 24.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வச்சிருக்கீங்க... அதுக்காகத்தான் இந்த மரியாதை’ன்னு சொன்னாங்க. அது பெரிய சந்தோஷம்!’’ - மலர்ந்து சிரிக்கிறார் சின்னக் கலைவாணர்.

‘‘இப்ப கௌதம்மேனன் - அஜித் காம்பினேஷன்ல ‘என்னை அறிந்தால்’ பண்றேன். வித்தியாசமான கதையமைப்பு. அதிகமா பேசாம, காமெடி பண்ணியிருக்கேன். அதானே இப்போ ட்ரெண்ட்! கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் நடிச்சு 13 வருஷம் ஆச்சு. ‘கிரீடம்’ படத்துக்கு அப்புறம் அஜித் சாரோட நடிச்சிருக்கேன். 7 வருஷ இடைவெளி... ‘வாலி’, ‘காதல் மன்னன்’ படங்கள்ல பார்த்த அஜித் வேற. ஒரு சராசரி இளைஞனாவும், எல்லா கனவுகளையும் அடையத் துடிக்கிற ஒரு ஹீரோவாவும்தான் அவரை அப்போ நான் பார்த்திருக்கேன்.

ஆனா, இப்போ இருக்கற அஜித் ரொம்ப பக்குவப்பட்ட ஆன்மிகவாதி. எல்லாரையும் நேசிக்கிறார். தனக்கு மக்கள் கொடுத்திருக்கிற இவ்வளவு பெரிய இடத்தை ரொம்ப மதிக்கிறார். ட்விட்டர், ஃபேஸ்புக்னு இப்போ ஒவ்வொரு தனி மனிதனும் மீடியாவா இருக்காங்க. இதை அவர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கார். அதனாலதான் எதைப் பத்தியும் அவர் கமென்ட் அடிக்கிறதில்லை. கருத்து எதையும் சொல்றதில்லை. எல்லாத்தையும் ரசிகர்களின் விருப்பத்திற்கே விட்டுடுறார்.

‘யூனிட்ல எல்லாரும் சந்தோஷமா இருக்காங்களா? எல்லாம் வசதியா இருக்கா?’ன்னு அக்கறையோட கவனிச்சிக்கிற நல்ல மனிதாபிமானியா அவரை நான் பார்த்தேன். இதுதான் புது அஜித்னு நினைச்சிக்கிட்டேன்!’’

‘‘ ‘வை ராஜா வை’ படத்தை கமர்ஷியலா பண்ணுங்கன்னு ஐஸ்வர்யா தனுஷுக்கு நீங்கதான் ஐடியா கொடுத்தீங்களாமே..?’’‘‘ஆமாம். ஐஸ்வர்யாவோட ‘3’ படம், உலக சாதனை படைச்சது. அதை நான் இல்லன்னு சொல்லலை. ஆனா, ஒரு கமர்ஷியல் டைரக்டரா அவங்க மக்கள்கிட்ட போய்ச் சேரலை. ‘இந்தப் பொண்ணு ஆர்ட் ஃபிலிம்தான் எடுக்கும் போல’ன்னு நினைச்சிட்டாங்க... கே.எஸ்.ரவிகுமார் கிட்டத்தட்ட 2500 ஆர்ட்டிஸ்ட்களை வச்சு ஒரு ஷாட் எடுக்கிறார்.

அவரோட 25 வருஷ சினிமா எக்ஸ்பீரியன்ஸ்ல இதை அவர் பண்றார். ஆனா, இந்த பொண்ணுக்கு இது ரெண்டாவது படம். இதிலேயே ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை வச்சு சீன் எடுக்கறாங்க. யாராவது ஒருத்தர் சின்ன தப்பு பண்ணியிருந்தா கூட கண்டு பிடிச்சிடுறாங்க. ஒரு நல்ல கமர்ஷியல் டைரக்டருக்கான குணம் இது! இந்தப் படத்தோட கதையை அவங்க சொன்னப்போ, ‘வணிக ரீதியா ஜெயிக்கணும்னா இந்த ஸ்டைல் வேண்டாம்... ரூட்டை மாத்துங்க’னு ஆலோசனை சொன்னேன். என் அட்வைஸ் ஓரளவுக்காவது அவங்களுக்கு பயன்பட்டிருந்தா நான் சந்தோஷப்படுவேன்!’’
‘‘அடுத்து..?’’

‘‘ ‘கன்னியும் காளையும் செம காதல்’... இது கரணுக்கு ரீ என்ட்ரி கொடுக்குற படமா இருக்கும். அதில் நான் வைரமுத்து மாதிரி கவிஞராக ட்ரை பண்ற கேரக்டர் பண்ணியிருக்கேன். நான் கதை நாயகனா நடிக்கிற ‘பாலக்காட்டு மாதவன்’ படம் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அடுத்த வருஷம் இந்த லிஸ்ட் இன்னும் நீளும்!’’‘‘தொடர்ந்து தனுஷோட நடிக்கிறீங்க... கூட்டணி உருவாகுதா?’’

‘‘சந்தோஷமா இருக்கு. எதுவுமே வொர்க் அவுட் ஆகும்போதுதான் தொடரும். முதன்முதல்ல தனுஷோட ‘படிக்காதவன்’ பண்ணினேன். அது சூப்பர் டூப்பர் ஹிட். அப்புறம் ‘மாப்பிள்ளை’, ‘உத்தமபுத்திரன்’ எல்லாம் நல்ல பெயர் வாங்கிக் குடுத்துச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை விட்டுட்டு 5 படங்கள் பண்ணினார். மீண்டும் அவர் என்னை ‘வி.ஐ.பி’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அது செம ஹிட்! தனுஷை பர்சனலாகவே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘மாப்பிள்ளை’ ஷூட்டிங்ல ஒரு முறை அவர், ‘இன்னிக்கு ஒண்ணா லன்ச் சாப்பிடலாம்’னு கூப்பிட்டார். ‘இல்லை சார், இன்னிக்கு என் ரெண்டாவது பொண்ணுக்கு பர்த் டே. ஸோ, வீட்டுக்குப் போறேன்’னு சொல்லிட்டேன். எதுவும் பேசாம தனுஷ் விருட்னு எழுந்திரிச்சுப் போயிட்டார். ‘ஐயையோ... கோவிச்சுக்கிட்டாரோ’ன்னு நினைச்சிட்டு கவலைப்பட்டபடியே என் வீட்டுக்குப் போனால் அங்க என் பொண்ணுக்கு பர்த்டே கிஃப்ட்டா நெக்லஸ் ஒண்ணு வாங்கி அனுப்பி வச்சிருந்தார்.

அற்புதமான மனிதர்!’’‘‘கௌதம்கார்த்திக்கு நீங்க ஸ்பாட்ல அடிக்கடி அட்வைஸ் கொடுப்பீங்களாமே?’’‘‘அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவங்க அப்பா கார்த்திக் ஞாபகம்தான் வருது. கௌதம்கிட்ட, ‘உனக்கு ஹைட் இருக்கு. நல்ல உடம்பு இருக்கு. டான்ஸ் கத்துக்கிட்டிருக்கே.. ஃபைட்டும் கத்துக்கறே.. ஆனா, நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடி. உங்க அப்பா நல்ல பர்ஃபார்மரா இருக்கறதாலதான் அவரால ஃபீல்டுல தாக்குப் பிடிக்க முடிஞ்சது. ‘அவர் டைமுக்கு வரமாட்டார்’னு ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ‘சீன்ல பின்னியெடுக்கிறான்யா’ன்னு பெயர் வாங்கிடு வார். தென்தமிழகத்துல கார்த்திக் சாருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. அவங்களை உன் ரசிகர்களா மாத்திக்க வேண்டியது உன்னோட பொறுப்பு’ன்னு சொன்னேன்!’’

‘‘இப்பெல்லாம் தனி காமெடி டிராக் எந்தப் படத்திலும் வர்றதில்லீயே..?’’

‘‘வடிவேலுவும் நானும் தான் அதுல கோலோச்சிக்கிட்டு இருந்தோம். நான் இடையில கொஞ்ச வருஷம் காணாமல் போயிட்டேன். வடிவேலு படங்களே பண்ணலை. நாங்க இல்லாததால தனி டிராக் வராம இருந்திருக்கலாம். இப்போ நான் வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல அவரும் வரலாம். திரும்ப தனி டிராக் காமெடியும் உயிர் பெறும். எல்லாமே ஓரளவுதான். எத்தனை நாளைக்கு டாஸ்மாக், டபுள் மீனிங், பொண்ணுங்களை கிண்டல் பண்றதுன்னு ஒரே மாதிரி காமெடியைப் பார்க்க முடியும்?’’

‘‘இப்போ புதுசா காமெடி நடிகர்கள் நிறைய பேர் வந்துட்டாங்க... போட்டி அதிகமா இருக்குமே!’’‘‘வரத்தானே செய்வாங்க? கவுண்டமணியும் - செந்திலும் இருக்கும்போதுதான் நானும் வடிவேலுவும் வந்தோம். யாரை எங்கே வைக்கணும்னு மக்களுக்கு தெரியும். எனக்குன்னு அவங்க போட்டுக் கொடுத்த சேர் இன்னும் அப்படியேதான் இருக்கு. நான் எப்போ வேணாலும் அங்கே உட்காருவேன்!’’எத்தனை நாளைக்கு டாஸ்மாக், டபுள் மீனிங், பொண்ணுங்களை கிண்டல் பண்றதுன்னு ஒரே மாதிரி காமெடியைப் பார்க்க முடியும்No comments:

Post a Comment