திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி 1997–ம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 1993–ம் ஆண்டு ஜூலை 21–ந்தேதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவர் கொல்கத்தாவில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர்.
2011–ல் மேற்கு வங்காள முதல்–மந்திரியாக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி, இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டார். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சுசாந்தா சாட்டர்ஜி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் முன்னாள் முதல்–மந்திரி புத்ததேவ் பட்டாச்சாரியா, இடது சாரி தலைவர் பீமன் போஸ், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட 300 பேரின் சாட்சியங்களை ஆய்வு செய்தது.
இந்த கமிஷன் நேற்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ‘1993–ம் இளைஞர் காங்கிரஸ் ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது சட்ட விரோதமானது. இது ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமானது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளது.

No comments:
Post a Comment