டெஸ்ட் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர சிங் தோனி, 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். வங்கதேசம் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை தொடங்கிய தோனி, 250 ஒருநாள் போட்டியில் விளையாடி 8,192 ரன்னும், 9 சதமும் அடித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் கால் பதித்த தோனி, சென்னையில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார். டெஸ்ட் போட்டியில் 4,876 ரன்னும், 6 சதமும், 33 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்துள்ளார்.
கடைசியாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக தோனி இருந்தார். காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் தோனிக்கு பதிலாக கோலி கேப்டனாக செயல்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய தோனி, முதல் இன்னிங்சில் 33 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட் ஆனார். மெல்போனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 24 ரன்னும் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்ததால் கேப்டன் தோனி மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது என தோனி முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று திடீரென அறிவித்துள்ளது. சிட்னியில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.
வெற்றி கேப்டனாக வளம் வந்த மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்துக்கு அழைத்துச் சென்ற பெருமை தோனியையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment