இயக்குனர் கௌதம்மேனன் தனக்கென தனி பாணியை வைத்துள்ளார். அவருடை படங்கள் சிறந்த தொழில்நுட்பத்துடனும், வித்தியாசமான திரைக்கதையையும் கொண்டிருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை இயக்க கௌதம்மேனன் தயாரானார்.
இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கிய சில நாட்களில் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்திற்கு திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மூவரில் திரிஷா இன்னும் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.
ஆனால் நிகிதா, அபர்ணா இருவரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. திரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்கவைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் தற்போது பிசியாக இருப்பதால் திரிஷாவையே நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார்.
திரிஷாவை வைத்து இப்படத்திற்காக முன்பு சிலகாட்சிகள் படமாகப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறாதால் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது கௌதம் இயக்கிய நடுனுசி நாய்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது.
மீண்டும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். மூன்று நாயகிகளில் ஒருவாராக நடிக்க அசினை கேட்டதற்கு தற்போது வேறு சில படங்களில் நடித்துவருவதாக கூறினார்.
மேலும் இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லவில்லை. நேரம் இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அசின் கூறினார்.
No comments:
Post a Comment