இப்படியொரு செய்தி வரும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். பெருமை வாய்ந்த குடும்பத்திற்கு வந்த பின்னடைவை எண்ணி உச் கொட்டுகிறார்கள் திரையுலகத்தில்!
வேறொன்றுமில்லை, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதாவையும், அவரது மகள் சவுந்தர்யாவையும் கைது செய்யும்படி வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். எல்லாமே பண விவகாரம்தான். 'சுல்தான் தி வாரியர்' படத்திற்காக பல இடங்களிலும் பைனான்ஸ் வாங்கியிருந்தார் சவுந்தர்யா. ஆனால் அதையெல்லாம் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு முன்பே முறைப்படி திருப்பி செலுத்தி விட்டதாகவும் தகவல்கள் வந்தன. அப்படியிருந்தும் எங்கோ மிச்சமிருந்திருக்கிறது போலும்.
பலமுறை அழைத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment