கோவை பிலிம் சிட்டி பட நிறுவனம் சார்பில் எம். தமிழரசன், எம். இலியாஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “மின்சாரம்”. இதில் நாயகனாக யுவராஜ், நாயகியாக மதுசந்தா ஆகியோர் நடிக்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்- அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி என். செல்வகுமாரன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் சொல்கிறார்.
குற்றவாளிகள் ஜாமீனில் வந்து மீண்டும் தப்பு செய்கின்றனர். எனவே ஜாமீனில் விடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இத்தகைய கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. திருமாவளவன் ஒரு பாடல் எழுதியுள்ளார். அவரையே வற்புறுத்தி நடிக்கவும் வைத்துள்ளோம்.
வேட்டி- சட்டையுடன் இதில் வருகிறார். சென்னையில் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. திருமாவளவன் எழுதிய “விழித்தெழு மனிதா விழித்தெழு” மற்றும் கானா உலகநாதன் பாடிய “காசி மேட்டு குப்பத்தையே கலக்குறாளே” சுஜிபாலா ஆடிய “கோலம்மா கோலம்மா கோலம்மா” போன்ற பாடல்கள் படமாகி உள்ளது.
இம்மாதம் திரைக்கு வருகிறது.

No comments:
Post a Comment