சினிமா தொடர்பான விழாதான். ஆனால் சாருநிவேதிதா, எக்ஸ்னோரா நிர்மல், தமிழச்சி தங்கபாண்டியன் என்று வந்திருந்தவர்களின் அடையாளம் அந்த மேடைக்கு வேறொரு அந்தஸ்தை கொடுத்திருந்தது. இடம்- நர்த்தகி படத்தின் பாடல் வெளியீட்டு விழா.
விழாவில் பேசிய இவர்கள் அத்தனை பேரும் நான் ஏன் இந்த மேடையில்? என்று விளக்கமும் அளித்தார்கள். திருநங்கைகள் தீண்டத் தகாதவர்கள் அல்ல என்பதுதான் அந்த மேடையின் ஒரே பேச்சாக இருந்தது. திருநங்கைகள் சார்பாக பேசிய ஒரு பெண்மணி படத்தின் இயக்குனர் விஜய பத்மாவை நடிகை பானுமதி என்று வர்ணித்தார். அவருக்கு பின்பு கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜயபத்மா என்று அவர் பாராட்டியதை அவ்வளவு விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் படத்தின் தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா பேசும்போது, நாங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதே தேதியில் படத்தை முடித்ததுடன், இவ்வளவு விரைவாக படத்தின் முதல் பிரதியையும் எடுத்துக் கொடுத்தது பெரிய விஷயம் என்றார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் எல்லா பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். செஞ்சியில ஷ§ட்டிங்கை முடிச்சிட்டு நைட் ஒன்பது மணிக்கு சென்னைக்கு வந்து மூணு மணி வரை கம்போசிங்ல இருந்திட்டு அதிகாலை எழுந்து செஞ்சி ஷ§ட்டிங்குக்கு போயிருக்காங்க இந்த டைரக்டர். அந்தளவுக்கு அவங்க சுறுசுறுப்பு என்றார் நா.முத்துக்குமார்.
இப்படி பலரையும் புகழ வைத்தார் விஜய பத்மா. ஒவ்வொரு டைரக்டரும் தன் முதல் படத்தின் சுறுசுறுப்பையும் அக்கறையையும் அடுத்தடுத்த படத்திலும் தொடர்வார்களா என்பதுதான் வெற்றிப்பட டைரக்டர்கள் எல்லாரும் விட்டு சென்றிருக்கிற கேள்வி. விஜய பத்மாவை நோக்கியும் அந்த கேள்வி எழாமல் இருந்தால் சரி!

No comments:
Post a Comment