தமிழர்களின் குமுறல்களையும் தவளை சத்தம் போலதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும் அந்த இசையமைப்பாளர். இல்லையென்றால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை ரகசியமாக சந்தித்துவிட்டு வந்திருப்பாரா என்ற அழுகுரல் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ரகசியமாக இலங்கைக்கு சென்று வந்திருக்கிறாராம் அந்த இசையமைப்பாளர். அங்கு பேசப்பட்ட விஷயங்கள்தான் அதிர்ச்சி. தமிழில் படம் எடுக்க பல கோடிகள் தருவதாக கூறியிருக்கிறாராம் ராஜபக்சே. இதனால் அவருக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இலங்கை தமிழர்கள் எல்லாரும் நன்றாகதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை என்கிற மாதிரி அமையப் போகிறதாம் இப்படத்தில் வரும் சில காட்சிகள். இதற்காகதான் கோடிகளை கொட்டிக் கொடுக்க முன் வந்திருக்கிறார் ராஜபக்சே.
கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இவரை து£தர்கள் ராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்றார்களாம் அரச மாளிகைக்கு. தண்ணீருக்கும் மண்ணெண்னைக்குமே கல்யாணம் பண்ணி பார்த்த இசையமைப்பாளர் அவர். இதற்கெல்லாமா குற்றவுணர்ச்சி வரப்போகிறது அவரிடமிருந்து?
பி.கு- தற்போது பிசியான டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் தன் மகனை வைத்துதான் இப்படத்தை இயக்கவும் போகிறாராம் இந்த இசைக்கிடங்கு.

No comments:
Post a Comment