பார்த்திபனுடன் அம்புலி தமிழ் படத்தில் நடிப்பவர் உமாரியாஸ்கான். இவர் கோயம்புத்தூரில் நடந்த விபத்தில் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரே சொல்கிறார்.
கோவையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். என் உதவியாளரும் உடன் வந்தார். ஒரு பாலத்தில் போய்க் கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. நாங்கள் எதிர்பாராத வகையில் டிரக் வேன் ஒன்று திடீரென லாரியை முந்திக் கொண்டு வேகமாக வந்தது அதை பார்த்ததும் எனதுகார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
நிலை தடுமாறி சுவரில் போய் இடித்து நின்றது. கீழே விழ சிறிய அளவு வழிதான் இருந்தது. அந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

great narrow escape umariyaas - say a thank to timely helped driver too...
ReplyDelete