போகிற போக்கை பார்த்தால் தலப்பாக்கட்டி, ஆம்பூர் ஸ்டைலில் அஜீத்தையும் பிரியாணிக்கடை ஓனராக்கி வேடிக்கை பார்ப்பார்கள் போலிருக்கிறது. எந்த பத்திரிகை அல்லது ஊடகங்களை திருப்பினாலும் 'தல போட்ட பிரியாணி' என்ற தலைப்பில் அவர் பிரியாணி சமைத்த கதையைதான் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இந்த தலைப்பை இனிமேல் யார் படித்தாலும் கறிக்கோழி ரேஞ்சுக்கு கதறுவது நிச்சயம். அந்தளவுக்கு போரடித்துக் கொண்டிருக்கிறார்கள் மீடியாக்காரர்கள்.
இந்த லட்சணத்தில் மேலும் ஒரு வியப்பு, த்ரிஷா பிரியாணி சாப்பிட்ட கதை! மங்காத்தா படப்பிடிப்பில் அவ்வப்போது பிரியாணி பொட்டலங்கள் வழங்கிய அஜீத், யாவற்றையும் த்ரிஷா இல்லாத நேரத்திலேயே வழங்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று ஒரு நாள் அஜீத்திடம், ஏன் எனக்கெல்லாம் பிரியாணி போட மாட்டீங்களா என்று த்ரிஷா சிணுங்க, அன்றைய தினமே அடுப்பை பற்ற வைத்து விட்டார் செஃப்!
தமிழ்சினிமாவில் 'நளபாகம்' என்றொரு யூனியன் இருக்கிறது. படப்பிடிப்புக்கு சமையல் செய்யும் அன்பர்களின் சங்கம்தான் இது. போகிற போக்கை பார்த்தால் இதிலும் உறுப்பினர் ஆகிவிடுவார் போலிருக்கிறது அல்டிமேட் ஸ்டார் அஜீத்!

No comments:
Post a Comment