புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியத்தை புகழ் பெற்ற ஓவியர் லியோ நார்டோ டாவின்சி வரைந்தார். கடந்த 1490-ம் அண்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்தார். பிரான்சை சேர்ந்த பட்டு வியாபாரி லிசா செரா டினி என்பவரின் மனைவி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த ஒவியத்துக்கு மாடலாக இருந்தது ஒரு பெண் அல்ல. இளம் வாலிபர்தான் மாடல் ஆக பணிபுரிந்துள்ளார் என்ற மாறுபட்ட கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை இத்தாலியை சேர்ந்த ஓவியர் சில்வானோ வின்செடி தெரிவித்துள்ளார்.
இவர் தலைமையிலான நிபுணர் கழுவினர் மோனாலிசா ஓவியத்தை ஆய்வு செய்தனர்.மோனாலிசா ஓவியம் வரைந்த டாவின்சியுடன் ஜியான் ஜியா கோனே காபுரோத்தி என்ற வாலிபர் உதவியாளராக பணிபுரிந்தார். இவரை மாடலாக வைத்து சில ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.
அதில் உள்ள வாய், மூக்கு உள்ளிட்ட பாகங்கள் மோனாலிசா ஓவியத்துடன் ஒத்து போகின்றன. எனவே மோனாலிசா ஓவியத்தின் மாடல் ஆக வாலிபர் காபுரோத்திதான் இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியாகி உள்ளது

No comments:
Post a Comment