வெண்ணிலாகபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் அழகர்சாமியின் குதிரை. இயக்குனர் கவுதம் வாசுதேவன் மேனனன் போட்டான் பேக்டரி பட நிறுவுனம் தயாரிக்கும் மேற்படி படத்தின் கதை இதுதானாம்! எது? ஏது?
அதாகப்பட்டது தேனி அருகே உள்ள ஒரு கிராம மக்கள், ஊர் திருவிழா நடந்தாதான் ஊரில் மழை பெய்யும் என நம்புகிறார்கள். திருவிழா நடைபெறும் நேரம் சாமியின் வாகனமான மரக்குதிரை வாகனம் காணாமல் போய் விடுகிறது. அதேநேரம் பெரிய குளம் அருகே உள்ள ஒரு மலை கிராமத்தில், குதிரையில் பொதி ஏற்றி பிழைப்பு நடத்தும் அழகர்சாமியின் குதிரையும் காணாமல் போய் விடுகிறது. அழகர் சாமிக்கும், அந்த குதிரை கிடைத்தால்தான் திருமணம் எனும் நிலை!
மரக்குதிரை கிடைத்து கிராம மக்களின் திருவிழா நடந்ததா? நிஜக்குதிரை கிடைத்து இவனது திருமணம் நடந்ததா? இரண்டு குதிரைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே அழகர்சாமியின் குதிரை படத்தின் சூடும் சுவையுமான கதைக்களம் ஆகும்.

No comments:
Post a Comment