இரக்க மனசுக்காரி ஸ்ரேயாவை அரக்க மனசுக்காரியாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது.
முதலில் இரக்க மனசு செய்தி. மும்பையில் ஒரு ஸ்பா திறந்திருக்கிறார் ஸ்ரேயா. திறந்திருக்கிறார் என்றால் எல்லா நடிகைகளும் போய் ரிப்பன் வெட்டிவிட்டு போஸ் கொடுப்பார்களே, அப்படியல்ல. இவரே முதல் போட்டு துவங்கியிருக்கிறார் இந்த பிசினசை! இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த ஸ்பாவில் பணியாற்றும் பல தொழிலாளிகளுக்கு பார்வையில்லை என்பதுதான். அவர்களுக்கு சுய வேலை வாய்ப்பு அளிப்பதற்காகதான் இந்த ஸ்பாவையே திறந்தாராம் ஸ்ரேயா.
அடுத்து அரக்க மனசுக்காரியானது எப்படி என்ற செய்தி. பாலிவுட் படமான மிட்நைட் சில்ட்ரன் படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம். இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தீபா மேத்தா ஒரு காட்சியில் நடிக்க ஸ்ரேயாவை வற்புறுத்தினாராம். அது சரியான படுக்கையறை காட்சி. வாட்டர் போன்ற படத்தில் லெஸ்பியன் கதையை சொல்லி நாட்டையே பரபரபாக்கியவர் தீபா. அப்படிப்பட்டவர் படுக்கையறை காட்சி எடுத்தால் எப்படியிருக்கும். அதனால்தான் அந்த காட்சியில் நடிக்க முடியாது என்றாராம் ஸ்ரேயா.
இனிமேல் காட்டுவதற்கு என்ன மிச்சம் இருக்கிறது அங்கே?

No comments:
Post a Comment