உலககோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய, இலங்கை, வங்காள தேசம் மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்துக்கு தீவிரவாதிகள் குறி வைத்து உள்ளனர். வெடிகுண்டுகளை வெடிக்க செய்தோ அல்லது தீவிரவாதிகள் திடீரென புகுந்தோ தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை கருதுகிறது. அதோடு வான்வழியாக வந்தும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கருதுகின்றனர்.
எனவே மும்பை மற்றும் அனைத்து மைதானங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இதையடுத்து வான்கடே மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நேரத்தில் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதேபோல மற்ற மைதானங்களிலும் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பிரச்சனை இல்லாமலா கிரிக்கெட் ?
ReplyDelete