நடிகை நயன்தாரா, நடிகர் பிரபுதேவாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். நயன்தாரா தற்போது “ராமாயணம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு சீதை வேடம் இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டார் என்றும், பிரபுதேவா அவரை படங்களில் நடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு இருப்பதாக ஒரு தெலுங்கு பத்திரிகையில் பேட்டி வெளியானது.
இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் தான் சொல்லாததையெல்லாம் பேட்டியாக வெளியிட்டு இருப்பதாக ஆவேசத்துடன் கூறினார். இதுகுறித்து ஐதராபாத்தில் “ராமாயணம்” படப்பிடிப்பில் இருந்த நடிகை நயன் தாரா கூறியதாவது:-
சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகையில் திருமணத்துக்குப்பின் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், ராமாயணம் தான் எனது கடைசி படம் தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா சொல்லி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்த தகவல்களை நான் சொன்னதாக வெளியிட்டு இருந்தார்கள்.அது போல் நான் தெலுங்கு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே இல்லை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக போட்டு என்னைப்பற்றி தவறான வதந்தியை பரப்புகிறார்கள்.
அந்த பேட்டியை படித்து பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களாக கற்பனையாக எழுதி இருக்கிறார்கள். அந்த பத்திரிகையில் இருந்து யாரும் என்னை சந்திக்கவே இல்லை. சினிமாவுக்கு முழுக்கு போடுவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். என்னைப் பற்றி இது போல் பல தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது கிடையாது.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

No comments:
Post a Comment