நடிகர் பார்த்திபன் மலையாள சரித்திர படம் ஒன்றில் நடிக்கிறார். மேல் விலாசம் என்ற அந்த படம் பார்த்திபனுக்கு 2வது மலையாளப் படம். இதற்கு முன்பு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் குஞ்சாகோ போபன், இன்னசென்ட், சம்யுக்த வர்மா ஆகியோர் நடித்தப் படத்தில் பார்த்திபன் ஒரு தமிழராகவே நடித்திருந்தார். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற அந்த படத்தில்தான் நடிகை அசின் அறிமுகமானார்.
தற்போது மேல் விலாசம் என்ற படத்தில் சுரேஷ் கோபி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி ஆகியோருடன் பார்த்திபனும் நடிக்கிறார். நாற்பதுகளில் நடப்பதாக இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கேரக்டர் ஏற்றிருந்தார். அந்த படம் பலராலும் பாராட்டப்பட்டேதா இல்லையோ... பார்த்திபனின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. அதன் எதிரொலியாகவோ என்னவோ... இப்போது மலையாள சரித்திர பட வாய்ப்பு பார்த்திபனுக்கு கிடைத்திருக்கிறது.

No comments:
Post a Comment