மும்பை நடிகைகள் பலருக்கு அழகிருக்கும். அதே அளவுக்கு சற்றும் குறையாத அலட்டலும் இருக்கும். ஆனால் மும்பையிலிருந்து வந்த கீர்த்தி சாவ்லாவிடம் அழகு மட்டும் இருந்தது. ஆனால் அலட்டலும் இல்லை. அதிர்ஷ்டமும் இல்லை. இவர் நடித்த பல படங்கள் பிளாப். லேட்டஸ்ட்டாக வந்த கலைஞரின் உளியின் ஓசை படத்தில் கீர்த்தி சாவ்லாவுக்கு அருமையான ரோல். ஆனால் அந்தோ பரிதாபம். அதன் பின் 'பிட்' படத்தில் நடிக்கிற அளவுக்கு போனது நிலைமை!
சிறிது காலத்திற்கு முன்பு ஸ்வேதாவின் மாயவலை என்ற படத்தின் விளம்பரங்களில் கீர்த்தி சாவ்லா போர்த்த வேண்டிய இடத்தையெல்லாம் திறந்து போட்டுக் கொண்டு நின்றார். காலம் போட்டுக் கொடுத்த ரூட் அது. இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடவும் சம்மதித்துவிட்டார் என்பதுதான் பரிதாபம்!
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் விதார்த் ஹீரோவாக நடிக்கும் 'முதல் இடம்' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார் கீர்த்தி சாவ்லா. அதுவும் யார் யாரையெல்லாமோ கேட்டுவிட்டு கடைசியில்தான் இவரிடம் வந்தார்களாம். முதல் நாள் இரவு போன் அடித்து "நாளைக்கு காலையில ஷ§ட்டிங் வந்திருங்க" என்கிற அளவுக்கு அழிச்சாட்டியம்!
அதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு 'கீர்த்தி' இல்லையே கீர்த்திக்கு! ஆத்திரம் தீருகிற அளவுக்கு ஆடித் தீர்த்திருக்கிறாராம் படத்தில்
No comments:
Post a Comment