ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கும் சூர்யா
கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட இதிலென்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்பவர்கள் காத்திருக்கிறது அதிசயம். இந்த இரட்டை வேடம் வழக்கமாக தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வருகிற சமாச்சாரம் அல்ல. இது வேறு மாதிரி. தலையோ, உடலோ ஒட்டி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் செய்து பிரித்தால் ஆபத்து என்று அஞ்சி அப்படியே வளர்த்து விடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒன்றாக சுற்றி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி... என்று வாழ்க்கை போகும். அப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிக்கப் போகிறாராம் சூர்யா. பெரிய சவால் நிறைந்த கேரக்டர் இது. நடிப்பவருக்கு மட்டுமல்ல, பிசிறில்லாமல் அதை எடுப்பவருக்கும் கூட! இரட்டையர்கள¢ வேடத்தில் நடிக்கும் சூர்யா அதற்கான ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கிறாராம்.
இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு
‘வித்தகன்' படத்தில் கோர்ட் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். ஹீரோ பார்த்திபனின் வக்கீலாக சுரேஷ்கோபி நடித்திருக்கிறார். இதுபற்றி பார்த்திபன் கூறுகையில் "ஹவுஸ்புல்", 'அழகி', 'குடைக்குள் மழை', 'அம்முவாகிய நான்' என மென்மையான கதைகளில் ஈடுபாடு காட்டினேன். அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்" என்கிறார் பார்த்திபன். "ஆக்ஷன் பாதைக்கு மாறியுள்ளேன். 'வித்தகன்' அதற்கான பிள்ளையார் சுழி எனலாம். இனிமேல் என் ரூட்டு இப்படித்தான் இருக்கும். என்னை இயக்கும¢ டைரக்டர்களிடம் ஹீரோ முகம் காட்டும் அதே வேளையில், பிற ஹீரோக்களை வைத்து நான் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார் பார்த்திபன்.
பெரிய ஹீரோவா? ஒரு பாட்டுக்கு ரெடி
கீர்த்தி சாவ்லா கூறியது: குமரன் இயக்கும் ‘முதல் இடம் என்ற படத்திற்கு ‘ஊரு ஊரு தஞ்சாவூரு என்ற பாடலுக்கு ஹீரோ விதார்த்துடன் நடனம் ஆடிய காட்சி தஞ்சாவூர் தெருக்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்? எனக் கேட்கிறார்கள். ஒரு பாடலுக்கு ஹீரோயின்கள் ஆடுவது புதிதல்ல. மேலும் இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிய பேனர் என்பதால் ஒப்புக்கொண்டேன். அதுபோல் பெரிய ஹீரோக்கள் படத்தில் இப்படியொரு வாய்ப்பு வந்தால் ஏற்பேன். ஒரு பாடலுக்கு ஆடுவது, கவரவ வேடத்தில் தோன்றுவதெல்லாம் இப்போது பாலிவுட்டில் புது டிரெண்டாக உருவாகி இருக்கிறது. தமிழிலும் ஹீரோ, ஹீரோயின்கள் அப்படி நடிக்கின்றனர். ஏற்கனவே ஹீரோயினாக நடித்து வரும் ‘திருமதி தமிழ் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதுதவிர எஸ்.வி.சேகர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். எந்த நேரத்திலும் வாய்ப்புக்காக எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.
இதையும் படியுங்களேன் ....
உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரும் அதிர்ச்சித் தொடர்...



No comments:
Post a Comment