இது தீபிகாவின் முதல் தமிழ் படம். மூன்று வேடங்களில் தோன்றும் ரஜினியின் இளம் ரஜினியை இவர் காதலிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி தீபிகா படுகோனே கூறும்போது, இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ரஜினி. அவருக்கு ஜோடியாக நடிப்பது மீகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
ராணா பட வேலைகள் விறுவிறுப்பாய் நடக்கின்றன. இதற்கிடையில் ரஜினியும் அவர் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோரும் திடீரென மும்பை சென்றனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.
பின்னர் ஜோஹு பகுதிக்கு சென்று ரஜினியின் நண்பர் முரளி மனோகரின் 25-வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். முரளி மனோகரும் ராணா தயாரிப்பாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இப்படத்தில் வில்லனாக சோனு சூத் நடிக்கிறார். இவர் சல்மான்கானின் “டபாங்க” படத்தில் கலக்கியவர். மேலும் பல இந்தி நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

உங்களால இவ்ளோ பதிவு எப்படி சார் போடமுடியுது,,
ReplyDelete@sakthistudycentre-கருன்
ReplyDelete@sakthistudycentre-கருன்இந்த வலைத்தளம் துவங்கும் போதே இன்றிலிருந்து பத்து மாதத்துக்குள்ள Alexa ranking ல 30,௦௦௦000த்துகுள்ள வரவேண்டும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தோட வேகம் தான் சார் இத்தனை பதிவுகளை போடவைக்குது.