படம் இயக்கும் அனன்யா!
நாடோடிகள் படத்தில் அறிமுகமான அனன்யா சீடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் ‘சீடன்’ படத்தை பார்த்த அனன்யா, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவின் காலை தொட்டு வாழ்த்துபெற்றபடி ‘இனிமேல் இப்படியொரு வேடம் கிடைக்குமான்னு தெரியாது’ என்றாராம். அனன்யா பற்றி இன்னொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளன. அனன்யா நடிக்க வருவதற்கு முன்பு மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சில வருடங்களுக்கு பிறகு அவரே படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
விடுமுறையில் நடிக்கும் காயத்ரி
‘18 வயசு’, ‘ஏன் இப்படி மயக்கினாய்?’ படங்களில் நடிக்கும் காயத்ரி கூறியதாவது: பெங்களூரில் பி.ஏ படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால், விடுமுறை எடுத்துக் கொண்டு நடிக்க அனுமதி தந்துள்ளனர். சமீபத்தில் நடந்த தேர்வில், 75 சதவீத மதிப்பெண் வாங்கினேன். அடுத்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன், சென்னையில் நிரந்தரமாக குடியேறுவேன். கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் ஜோடியாக ‘பொன்மாலைப் பொழுது’ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறேன். நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் இருந்து வித்தியாசப்பட நினைக்கிறேன்.
தெலுங்கில் பிரீத்திகா
தமிழில் ‘சிக்கு புக்கு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரீத்திகா ராவ். இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை. இவர், இப்போது தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பிரீத்திகா கூறியதாவது: தெலுங்கில் வருண்சந்தோஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறேன். யு.கே.அவென்யூஸ் சார்பில் பி.உதயகிரண் தயாரிக்கிறார். இது காதல் கதை என்றாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர். ஷ்ரவான் இயக்குகிறார். சமீபத்தில் போட்டோஷூட் நடந்தது. எங்கள் ஜோடி கண்டிப்பாகப் பேசப்படும் என நினைக்கிறேன். இதையடுத்து தமிழில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு பிரீத்திகா கூறினார்.



No comments:
Post a Comment