மைனா படத்தின் 100 வது நாள் போஸ்டர் சென்னையை கலக்கிக் கொண்டிருக்கிறது. (100 வது நாள் விழாவையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு. இதுக்காவது நடக்குமா?) அப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஜீசஸ், தினந்தோறும் ஜிகிர்தண்டா கொடுத்துக் கொண்டிருக்கிறார்! எப்படி தெரியுமா? வழியில கிடக்கிற கண்ணாடிக் கல்லே வைரமா மாறி இவர் பாக்கெட்டில் விழுற அளவுக்கு!
சரி.. நீட்டி முழக்காமல் விஷயத்திற்கு வருவோம். லிங்குசாமி தயாரிப்பில் பிரபுசாலமன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். வழக்கம் போல இதிலும் விதார்த் தான் நடிக்கப் போவதாக பேச்சு. ஏவிஎம் படத்தை முடித்துவிட்டு அவர் வரும்போது தனது படத்தை துவங்கலாம் என்று காத்திருந்தார் பிரபு சாலமன். இதற்கிடையில் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தார் லிங்குசாமி. அதில் நடிக்க ஆர்யாவின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்தார் லிங்கு. சீனாவுக்கு போகணும். லைவ்வா சில விஷயங்களை அப்சர்வ் பண்ணனும் என்றெல்லாம் மிஷ்கின் கடுப்பேற்ற, அப்படியே அந்த விஷயத்தை ஒத்தி வைத்துவிட்டாராம்.
ஆர்யாவிடம் வாங்கிய தேதிகளை வீணாக்க வேண்டாம். அவரை வச்சு நீங்களே இயக்குங்க என்று பிரபுசாலமனிடம் கூறிவிட்டதாக தகவல். இப்ப சொல்லுங்க, பிரபுசாலமனுக்கு ஜீசஸ் கொடுப்பது ஜிகிர்தண்டாவா இல்லையா!

No comments:
Post a Comment