ஆர்யாவும், பூஜாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நான் கடவுள் படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு மதராசபட்டணம் படத்தில் ஜோடியாக நடித்த எமியுடன் இணைத்து பேசப்பட்டார். தற்போது கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேயை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் படப்பிடிப்பில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஷர்மிளா மந்த்ரே அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஆர்யாவும் நானும் காதலிப்பதாக வந்த செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆர்யாவுடன் தில்லு முல்லு என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். அதை எனக்கு நெருக்கமான உறவினர் தயாரிக்கிறார். கன்னடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். என்னோடு நடித்தவர்களுடன் இணைத்து இதுபோல் எந்த கிசுகிசுக்களும் வந்தது இல்லை. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியாக நெருக்கமாக நான் பழகுவேன்.
ஆர்யாவுடனும் அதுபோல்தான் பழகினேன். எங்களை இணைத்து வதந்திகள் பரவுவதற்கு வெளிப்புறப்படப்பிடிப்பில் நாங்கள் தனியாக சந்தித்து பேசியதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு தெலுங்கு படப்பிடிப்பில் நான் இருந்தேன். பக்கத்திலேயே ஆர்யா நடித்த தமிழ் படப்பிடிப்பும் நடந்தது. அவருடன் தில்லுமுல்லு படத்தில் நடித்து வருவதால் நண்பர்கள் என்ற முறையில் தனியாக சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அதை காதல் என்று கதை கட்டி விட்டனர்.
இதில் வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை.
இவ்வாறு ஷர்மிளா மந்த்ரே கூறினார்.

No comments:
Post a Comment