ஆந்திரா கார 'ஆவக்காய் பிரியாணி’ தங்கத் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி ஆகிவிட்டது. பிரியாணியின் பெயர்: பிந்து மாதவி. காரசாரமாக டோலிவுட்டில் வலம் வந்த பெண் 'வெப்பம்’ படம் மூலம் தமிழகத்திலும் அனல் கிளப்ப வருகிறார். ''உங்களை ஏற்கெனவே பார்த்த மாதிரி இருக்கே?'' ''அட, கண்டுபிடிச்சிட்டீங்களா! நான் அக்மார்க் ஆந்திரா பொண்ணு. அப்பாவுக்கு கவர்மென்ட் வேலை. அதனால அடிக்கடி டிரான்ஸ்ஃபர்னு நிறைய ஊர் சுத்தியிருக்கேன். அப்படி சென்னையில் தங்கி காலேஜ்ல படிச்சப்போ, மாடலிங்கும் பண்ணேன். 'சரவணா ஸ்டோர்ஸ்’ விளம்பரத்தில் முதல் தடவை நடிச்சேன். அப்புறம் தனிஷ்க், டாடா கோல்டுனு பல விளம்பரங்கள். ஸோ, நான் உங்களுக்குப் பரிச்சயமா இருக்குறது அதிசயம் இல்லை!'' ''தெலுங்கில் நீங்க கிளாமர் கோழி. அதே டெம்போவை இங்கேயும் வெளிப்படுத்துவீங்களா?'' ''இந்த வயசுல கிளாமரா நடிக்காம பாட்டி ஆன பிறகா நடிக்க முடியும்? 'வெப்பம்’ படத்துல எவ்வளவு கிளாமர்னு ஸ்க்ரீன்ல பார்த்துக்கோங்க. படத்தில் நான் செகண்ட் ஹீரோயின்தான். ஆனா, செம வெயிட் கேரக்டர். 'ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே’னு பாட்டு முழுக்க எனக்கே எனக்கு டெடிகேட் பண்ணியிருக்காங்க டைரக்டர் அஞ்சனா. படத்துல அந்தப் பாட்டுதான் டர்னிங் பாயின்ட். அதுல என் பெர்ஃபார்மன்ஸ் எனக்கே ஆச்சர்யம். பசங்கள்லாம் அசந்து போயிருவாங்க. இங்கே ஹீரோயினுக்கு ரசிகர் மன்றம், கோயில்லாம் சர்வசாதாரணமாமே. எல்லா ஆட்டத்துக்கும் நான் ரெடி. தாராளமா என்னை நீங்க அடுத்த அனுஷ்கா ஆக்கி அழகு பார்க்கலாம்!'' ''இவ்வளவு தைரியமா சொல்றீங்க... வீட்ல திட்ட மாட்டாங்களா?'' ''குட் கொஸ்டீன்! நான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சதே அப்பாவுக்குப் பிடிக்கலை. ஆறு மாசம் என்கூடப் பேசாம இருந்தாரு. ஆனா, விளம்பரங்களில் நான் நடிக்க ஆரம்பிச்சதும் வந்த வரவேற்பைப் பார்த்துட்டுச் சமாதானம்ஆயிட்டார். சொல்லப் போனா, 'ஆவக்காய் பிரியாணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தப்ப அப்பாதான் எனக்குத் தைரியம் சொல்லி, சினிமாவில் நடிக்க வெச்சார். அதனால நேக்கு பயம் லேது!'' |
Monday, February 7, 2011
நான் தான் அடுத்த அனுஷ்கா!
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment