மார்ச் முதல் வாரம் முதல் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை இயக்க இருப்பதாக இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நாயனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஒகே ஒகே).
இப்படத்தை நாயகி யார் என்ற குழப்பம் நீடித்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆனது. இதனை அடுத்து ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், "ஒகே ஒகே படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டியில் மார்ச் முதல் வாரம் முதல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 14ம் தேதியே படத்தை துவக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஹன்சிகா, சந்தானம் மற்றும் படக்குழுவினரின் தேதிகள் ஒன்றாக கிடைக்காதால் ஆரம்பிக்க இயலவில்லை.
இப்போது தான் 'தெய்வ மகன்' படத்தின் செட்டில் சந்தானத்தை சந்தித்து 45 நிமிடங்கள் ஒகே ஒகே படத்தின் காட்சிகள் குறித்து பேசினேன். நீண்ட நாட்கள் கழித்து சந்தானத்தை சந்தித்து சந்தோஷமாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment