பேரறிஞர் அண்ணாவின் ஆவி தன்னிடம் கூறியதால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருப்பதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அம்பத்தூர் பொன்னேரி தொகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது விஜயகாந்த், நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா? கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் முடியாது என்றார்.
No comments:
Post a Comment