தமிழில் சக்கபோடு போட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியை தொடர்ந்து கன்னடத்திலும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் கவுதம் வாசுதேவ்மேனன்.
சிம்பு-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில், கடந்தாண்டு வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவுக்கும், த்ரிஷாவுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது இந்தப்படம். தமிழில் கிடைத்த வெற்றியை பார்த்த இயக்குநர் கவுதம், இந்தியிலும் இப்படத்தை எடுக்கிறார். இதில் ப்ரத்திக் பாபர், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஏப்ரலில் இப்படத்திற்கான வேலையை துவங்குகிறார்.
இந்நிலையில் கன்னடத்திலும் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம். இதில் ஹீரோவாக புனித் ராஜ்குமார் நடிக்கிறார். இதற்காக பெங்களூரு சென்று புனித்தை சந்தித்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பற்றி கூறியிருக்கிறார் கவுதம். புனித்தும் நடிக்க சம்மதித்து இருக்கிறார். நவம்பரில் இப்படத்திற்கான வேலையை துவங்குகிறார் கவுதம். தமிழில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே கன்னட மற்றும் இந்தி படங்களுக்கும் இசையமைக்கிறார்
No comments:
Post a Comment