பொன்னர் சங்கர் படம் எனக்கு கலைஞர் தந்த பரிசு என்று நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எல்லா மாதிரியான வாழ்க்கையையும் வாழ்ந்துட்டு இருந்தப்போ, திடீரென ஒரு சறுக்கல். என்ன நடந்ததுன்னு யோசிச்சுப் பார்க்கக்கூட நேரம் இல்லை. அதிலிருந்து மீண்டு வந்து எனக்கு வாழ்வு கொடுத்து, முகவரி கொடுத்த சினிமாவை மறுபடியும் நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். தோள் தொட்டு ஆறுதல் தந்தார் அப்பா. ஓர் அதிகாலையில் கலைஞரைச் சந்திச்சு கைகட்டி நின்னப்போ, பட்டென "பொன்னர் சங்கர் நாவலை எடுத்துக் கொடுத்து, ""இது உன்னை மாற்றும்ன்னு நம்பிக்கை மொழி சொன்னார். எனக்குன்னு அவர் தந்த பரிசு இது. என் மனசுக்கு மருந்தா இருந்தது. இது மாதிரியான ஒரு கதையில் நடிக்க பலருக்கு ஆர்வம் இருக்கும். சில பேர் இதைத் திட்டமிட்டு யோசிச்சு வெச்சிருப்பாங்க. அது எனக்கு கலைஞர் மூலமாகவே கிடைத்ததில் மகிழ்ச்சி. மற்ற படங்களை விட இதில் இன்னும் ஆர்வமாக இருக்கிறார். சமீபத்தில் படத்தைப் பார்த்தவர். மனம் திறந்து பாராட்டி, திருத்தங்களைச் சொல்லி சென்றார். கலைஞரின் திரை வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எனக்கும்தான், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment