திருச்சி திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி செல்வேந்திரன்,
ஒரே ஒரு விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். எதற்கு என்றால், அவர் தேர்தல் அறிக்கையின் துவக்கத்தில் ஒரு வரி சொல்லியிருக்கிறார், அதை யாரும் கவனித்தார்களோ இல்லையோ என்பது எனக்கு தெரியாது. மக்கள் நல திட்டங்கள் தொடரும் என்று சொல்லியிருக்கிறார். கலைஞர் அறிவித்த திட்டங்கள் உண்மையிலேயே மக்கள் நல திட்டங்கள்தான் என்று அவர் நிதானத்தோடு இருந்தபோது, எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த திட்டங்கள் எல்லாம் வீண். மக்கள் அனைவரும் சோம்பேறியாகி விடுவார்கள். மக்கள் அனைவரும் தூங்க போய்விடுவார்கள். உழைக்க மாட்டார்கள். இலவசத்தால் இந்த நாட்டை கெடுத்துவிட்டார்கள் என்று, அத்தனை பேரும் திரும்ப திரும்ப எழுதினார்கள். ஜெயலலிதாவின் கொசுவத்தி சுருளில் தூங்கி கொண்டிருக்கிற கூட்டணி கட்சித் தலைவர்களும் எழுதினார்கள்.
ஆனால் இன்று உங்கள் தலைவியே மக்கள் நல திட்டங்கள் என்று ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அது தொடரும் என்று அறிவித்திருக்கிறார். மரியாதையாக மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் நீங்கள் சொன்னதெல்லாம் தவறு என்று.
கலைஞரை 6வது முறையாக முதல் அமைச்சராக ஆக்குங்கள் என்று நான் கேட்கவில்லை. அது சரித்திரத்தின் கட்டாயம். எவன் மறுத்தாலும் அதுதான் நடக்கும். நீங்கள் விசுவாசமாக இருங்கள். எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் குடிக்கிற தண்ணீருக்கு விசுவாசமாக இருங்கள். சாப்பிடுகிற உணவுக்கு விசுவாசமாக இருங்கள். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு விசுவாசமாக இருங்கள். கருவில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு விசுவாசமாக இருங்கள். ஏனென்றால் அத்தனையிலும் கலைஞரின் உதவி இருக்கிறது என்றார்.
இன்றைய பதிவுகள்...
- கமல், செல்வராகவன் இணையும் படத்தின் பெயர்?
- அதிமுகவின் மோசடி வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்: ...
- த்ரிஷா மிட்நைட் பார்ட்டி! ஐதராபாத்தில் அமர்க்களம்!...
- மீண்டும் புலிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரிகள் 5 பேர...
- எம்ஜிஆர்-ஜெயலலிதா-கலைஞர்...:சத்யராஜ் சமாளிப்பு
- விவேக்கிற்கு சிபாரிசு செய்யும் அப்துல் கலாம்
- வடிவேலு உங்களை தாக்கி பேசியிருக்கிறாரே? விஜயகாந்த்...
- வைகோவிடம் ஆதரவு கேட்கும் கம்யூனிஸ்ட் கட்சி
- ஜீரோ மார்க் போட்ட ராமதாஸ் ஹீரோ என்கிறார்:விஜயகாந்த...
- மலையில் இருந்து தூக்கி வீசிய கருணாநிதி -வைகோ
- அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்...
- தமிழக காங்கிரஸ் தேர்தல் பிரசாரம்-சோனியா, ராகுல் பு...
- தேர்தல் களத்தில் முதல்வர் கருணாநிதி கடந்து வந்த பா...
- உட்கார சீட்டு இல்லை; நின்னுக்கிட்டு பிரச்சாரமா? ...
- தேர்தல் களத்தில் ஜெயலலிதா கடந்து வந்த பாதை...
- அழகிரி மிரட்டல் என்னிடம் செல்லாது -விஜயகாந்த்
- முதல்வர் கருணாநிதி சொத்து விவரம்
- திருச்சி கல்வீச்சு : ஜெயலலிதா பதில்
- சாதிக்பாட்சா தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன?
- விஜய் படத்திற்காக மீண்டும் இணையும் இரு சிகரங்கள்
- தமிழகத்தில் கடைசி ஏழை இருக்கும் வரை இலவச திட்டங்கள...
- கருணாநிதி - ஜெயலலிதாவின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் ...
- அதிமுகவுடன் கூட்டணி ஏன் ?-விஜயகாந்த்
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்
No comments:
Post a Comment