சூர்யா நடிக்கும், ‘7-ஆம் அறிவு’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், ‘7-ஆம் அறிவு’. ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடித்துள்ளார். இவர், ‘மொங் ஆன் ஃபயர்’, ‘தி ரிபல்’, ‘பவர் கிட்ஸ்’ உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்காப்பு கலை சண்டைகளில் சிறந்தவரான இவர், ‘த பெர்பக்ட் ஸ்லீப்’, ‘ஸ்பைடர் மேன்’ உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டைக்காட்சிகளும் அமைத்துள்ளார். தமிழ் படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, ‘இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். சூர்யாவுக்கும் எனக்குமான சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும். சூர்யா திறமையான நடிகர். ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நாங்கள் இருவரும் 42 நாட்கள் உழைத்துள்ளோம். இதில் வெளிநாட்டுக்காரனாக நான் நடித்துள்ளதால் தமிழ்ப் பேச வாய்ப்பில்லை. இருந்தாலும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ளேன்’ என்றார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக சூர்யா, சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment