தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் வாக்குகள் எண்ணப்படுகிற தினத்தன்று சென்னையிலோ, மதுரையிலோ அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டாம் என்று நினைக்கிறாராம் வடிவேலு. அதன் விளைவாக குடும்பத்தோடு எங்காவது சென்று விடலாம் என்று முடிவெடுத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதை உறுதிப்படுத்துகிற மாதிரி நேற்று நள்ளிரவு விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வடிவேலு வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அவர் வழக்கமாக கோடை விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம்தான். இந்த முறையும் அப்படிதான் சென்றிருக்கிறார். ஆனால் எந்த நாட்டிற்கு சென்றிருக்கிறார் என்பது தெரியாது என்றார்கள்.
இப்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை அவர். எனவே கால்ஷீட் தொந்தரவுகள் இருக்கப் போவதில்லை. அதன் காரணமாக இந்த ட்ரிப்பை நீண்ட நாட்கள் என்ஜாய் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம். அநேகமாக வாக்கு எண்ணிக்கை முடிந்து சில தினங்கள் கழித்துதான் சென்னைக்கு வருவார் என்கிறார்கள்.

No comments:
Post a Comment