செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள் கிராமபுறங்களில். எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டாத வடிவேலு, தன்னையறியாமல் மேற்படி பழமொழிக்கு உயிரூட்டியிருக்கிறார். பகையாக இருந்தாலும் இவரால் பணமழை பொழிந்திருக்கிறது ஒருவருக்கு! அந்த அதிர்ஷ்டசாலி சிங்கமுத்துவேதான். இந்த தேர்தலில் சிங்கத்தின் வசூல் எவ்வளவு என்கிறீர்கள்? அது கெடக்கும் ஆஃப் சி என்கிறார்கள் கட்சிக்காரர்கள்!
அம்மா மட்டுமே முப்பது கொடுத்தாராம். லோக்கல் கலெக்ஷன் இருபது இருக்கும் என்று மனக்கணக்கு போடுகிறது அரசியல் வட்டாரம். அடிகொடுத்த கட்டபுள்ளைக்கே இவ்வளவு சேதம்னா... அடிவாங்குன எதிர்கோஷ்டிக்கு? என்று ஆச்சர்யம் காட்டலாம், தப்பில்லை!
சிங்கமுத்துவின் வசூல் எல் கணக்கு என்றால் வடிவேலுவின் வசூல் சி கணக்காம்! மக்களின் மனக்கணக்கு என்ன என்பதுதான் இன்னும் புரியவே இல்லை யாருக்கும்!


No comments:
Post a Comment