சிம்பு-பரத்-அனுஷ்கா உள்ளிட்டவர்கள் நடித்து பல நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்து, பர்ஸ்ட் காப்பி ரெடியான படம் வானம்! இப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது ஆனால் படத்தை இணைந்து தயாரித்த வி.டி.வி கணேஷூம், ஆர்.கணேஷூம் படத்தின் நெகடீவ் ரைட்ஸை வெவ்வேறு பைனான்ஸியர்களிடம் வைத்து இவருக்கு தெரியாமல் அவரும், அவருக்கு தெரியாமல் இவரும் இரண்டு இடத்தில் பைனான்ஸ் வாங்கிவிட்டார்களாம். அதனால் பட ரிலீஸ் பஞ்சாயத்துக்கு உள்ளாகிவிட்டது. இப்பொழுது கிளவுட் நைன் தயாநிதி அழகிரி இரண்டு பைனான்ஸியர்களுக்கு பணத்தை செட்டில் செய்துவிட்டு கணேஷ்(ஸ்கொயர்)களிடமிருந்து படத்தை வாங்கி வெளியிடுகிறார். ஏப்ரல் 29ம் தேதி வானம் வசப்பட இருக்கிறது திரையரங்குகளில்.

No comments:
Post a Comment