சட்டசபை தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவோம் என, மதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மதிமுக தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டவுன் மற்றும் பேட்டை பகுதியில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக வட்ட செயலாளர் சுப்பிரமணியன், மதிமுகவை புறக்கணித்த காரணத்தினால் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம். மதிமுக இதில் உறுதியாக உள்ளது என்றார்
மதிமுக பகுதி செயலாளர் வடிவேல் பாண்டியன் கூறுகையில், கூட்டணியில் இருந்து அதிமுக புறக்கணித்ததால், திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க எங்கள் பகுதி மதிமுகவினர் முடிவு செய்துள்ளோம் என்றார்

No comments:
Post a Comment