தனுஷ் நடிப்பில் உருவாகி, அவரது ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே ரிலீசாகிறது மாப்பிள்ளை படம்.
ஆனால் ரசிகர்களை இந்தப் படம் கவருமா? உதட்டைப் பிதுக்குகிறார்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.
காரணம், இந்தப் படம் ஏற்கெனவே தமிழில் வந்த ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக். அதே படம், அதே தலைப்பு, அதே பாடல்கள் என வந்திருந்தாலும், ஒரிஜினல் படத்தின் தரத்தில் 50 சதவீதம் கூட இந்தப் படத்தில் இல்லை என்பது பாக்ஸ் ஆபீஸ் முதல் கட்ட ரிப்போர்ட்.
இதுக்கு பேசாம, ரஜினி நடிச்ச பழைய பட டிவிடியை வாங்கிப் போட்டுப் பாத்திருப்போம். கொஞ்சம் கூட லாஜிக்கோ, ரசிக்கும் அளவிலோ இல்லாத தனுஷின் ஆக்ஷன், பஞ்ச் டயலாக், ரீமிக்ஸ் எனும் பெயரில் ஒரிஜினல் பாடல்களைக் குதறி வைத்திருப்பதையெல்லாம சகித்துக் கொள்ள முடியவில்லை என படம் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "தயவு செய்து ரஜினி சாரோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவரை இமிடேட் செய்து யாராலும் ஜெயிக்க முடியாது. எனவே அவர் நடித்த மாப்பிள்ளை படத்தை என் பாணியில் செய்திருக்கிறேன். எனது ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மற்றவர்களுக்கு எப்படியோ... தெரியவில்லை!" என்றார்.
அவரது ரசிகர்களுக்கு மட்டும்தான் என்றால்... அடுத்த வாரம் வரை கூட தாங்காதே!!

No comments:
Post a Comment