| கிசான் பாபட் பாபுராவ் அசாரே | |
| பிறப்பு | சனவரி 15 1940(அகவை 71) பிங்கார், மகாராட்டிரம்,இந்தியா |
| அறியப்படுவது | நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டம்; ஊழல் எதிர்ப்பு இயக்கம் |
| சமயம் | இந்து |
| பெற்றோர் | லட்சுமிபாய் அசாரே (தாய்) பாபுராவ் அசாரே (தந்தை) |
| இணையத்தளம் | |
பரவலாக அண்ணா அசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare) (பிறப்பு: சூன் 15, 1938), ஓர் இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார். இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.
லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்
2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்துகிறார்.

No comments:
Post a Comment