அதிமுக கூட்டணியை விரும்பாத காரணத்தினாலேயே, அக்கட்சியினரோடு விஜயகாந்த் மோதலில் ஈடுபட்டார் என, வடிவேலு கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,
விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது, அதிமுகவினர் அவர்களது கட்சி கொடியை தூக்கி காட்டினார்கள். அவர்களை பார்த்து கொடியை இறக்குங்குங்கடா. சொல்லிக்கிட்டே இருக்கிறேன். இங்க இருக்கிறவன் எல்லாம் முட்டாளா. நீங்க மட்டும் அறிவாளியா என்கிறார்.
இதுக்கு அதிமுகவினர் கொடியை இறக்க முடியாது என்று சொன்னதும், நான் என் கட்சிக்குதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என விஜயகாந்த் சொல்கிறார். கூட்டணி கட்சி என்றால் என்ன. ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு கேட்க வேண்டும். அதுதான் கூட்டணி. ஆனால் நீ (விஜயகாந்த்). நீ வேற நா (விஜயகாந்த்) வேற என்று கூட்டணி சேர்ந்திருக்க. அந்த கூட்டணி எதுக்கு உனக்கு. அந்த கட்சியில அந்த ஆள தப்பா சேர்த்துட்டாக. ஒரே அக்கப்போரு. கூட்டணியில் தொகுதி ஒதுக்கவில்லை என உருவபொம்மையை கொளுத்தினாங்க.
வேட்பாளர் பெயரை தப்பா சொல்லிருக்கார் இந்த ஆளு. வேட்பாளர் பெயர் பாஸ்கர். இந்த ஆளு பாண்டியன் என்று சொல்லிருக்காரு. அண்ணே அண்ணே என் பெயர் பாஸ்கர் இல்லையென சொல்லியிருக்கிறார். நான் வைக்கிற பெயர் பாண்டியன் என்று சொல்லி வேட்பாளரை அடிச்சிருக்கிறார். மீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு.
வேட்பாளரை தாக்கியது ஏன் என்று கேட்டால், என்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் நாளைக்கு மகாராஜாவா ஆகிவிடுவார்கள். அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு கல்யாண மண்டபத்தில் அனைவரையும் அழைத்து வாயில் குத்த வேண்டியதுதானே. அதாவது சிந்தனையே இல்ல. நினைவே இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்காரு. இவ்வாறு வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment