இந்தியா&;இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கத்தினர் நேற்று தாராவியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ஆ.கணேசன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை நாம் தமிழர் இயக்கத்தினர் தீயிட்டு கொளுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கென்னடி, சுந்தர், நாதன், பன்னீர் செல்வம், ராஜா உள்பட 50&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்ட உள்ளதாக நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-
பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும்.
இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment