அண்ணாமலை பல்கலை., மாணவர் நாவரசு கொலை வழக்கு தொடர்பாக, இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட், கடலூர் போலீசில் இன்று சரணடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை பல்கலை., முன்னாள் துணை வேந்தர் பொன்னுச்சாமியின் மகன் நாவரசு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரில் 1996 ம் ஆண்டு டில் படித்தார். இவரை இவருடன் படித்த மாணவன் ஜான்டேவிட் அறைக்கு அழைத்து சென்று ராகிங் செய்து துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தான். இந்த வழக்கில் செஷன்ஸ் கோர்ட்டில் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இவன் விடுதலை ஆனான் . இந்த ஐகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான்டேவிட்டுக்கு விதித்த இரட்டை ஆயுள் சரியானதுதான்என்றும், ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தான் தேடப்படுவதையறிந்த ஜான்டேவிட் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வந்தனர். இதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று கடலூர் போலீசாரிடம் ஜான் டேவிட் சரணடைந்தார். அவரை கடலூர் மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்த தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment