பிரபுதேவா நயன்தாரா திருமணம் எப்போது என்ற கேள்விகளுக்கு அரசல் புரசலாக விடை தெரிய ஆரம்பித்திருக்கிறது. அநேகமாக ஜுலை மாதம் இந்த வைபவம் நடந்தேறலாம்! ஆனால் முன்னாள் மனைவி ரமலத்துக்கு தர வேண்டிய செட்டில்மென்ட் மட்டும் இன்னும் செய்யப்படாமல் இருப்பதாகவும் தகவல் உலவுகிறது. இந்த விஷயத்தில் இன்னும் தாமதம் ஏன்?
பொதுவாக நீதிமன்றத்தில் சில நடைமுறைகள் உண்டு. பரஸ்பரம் இருவரும் விவாகரத்துக்கு விருப்பம் தெரிவித்தாலும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் நீதிமன்றத்தில் வந்து அதை இருவரும் உறுதி செய்ய வேண்டுமாம். அப்புறம்தான் முறையான விவாகரத்தை வழங்கும் நீதிமன்றம். ஆனால் ஆறு மாதம் கழித்து இருவரில் ஒருவர் சம்மதிக்கவில்லை என்றாலும் விவாகரத்து வழங்குவதில் சிக்கல் வரும்.
ரமலத் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டார் என்ற நம்பிக்கையில் சொத்துக்களை எழுதி வைக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் வந்து சொதப்பினால் என்ன செய்வது என்ற அச்சமும் நிலவுகிறதாம் மாஸ்டருக்கு. அதனால்தான் இந்த செட்டில்மென்ட் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நீதிமன்றம் கெடு விதித்திருக்கும் நாள் ஜூனில் வருகிறது. அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் சொத்து விஷயங்கள் இறுதி செய்யப்படும் என்கிறார்கள்!

No comments:
Post a Comment