நடிகர் வடிவேல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வக்கீல் மகேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-
நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார்.
6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை-பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச்சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான்.
சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள். இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமாப சித்தப்பிரமை பிடித்தவர் போல பேசுகிறார். கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார்.
அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண் எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார். வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது.
500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்.
ஆனா வராது. கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையாப கட்சி தொடங்கி விட்டாராம் கட்சி. கட்சி தொடங்கிய உடனே முதல்- அமைச்சர் ஆகிவிட முடியுமாப முதல்- அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும்.
நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியதுதானேப என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும். நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன்.
எவ்வளவு பிரச்சினைகள்ப பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்ப எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார்.
வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment