திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேல் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து வடிவேலுவையும், திமுகவையும் விமர்சித்து பிரச்சாரம் செய்ய நடிகர் சிங்கமுத்து களம் இறங்கியிருக்கிறார்.
வடிவேலுவுக்கும்- சிங்கமுத்துவுக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரின் மோதல் ஆரம்பமாகிவிட்டது.
சென்னையில் நடந்த பிரச்சாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், ‘’புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார்.
அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.
நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும்.
விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.
எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு.
அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக எல்லாரும் பார்க்கதானே போறீங்க’’ என்று வடிவேலுவை வறுத்தெடுத்தார்.
No comments:
Post a Comment