ஆண் குழந்தைக்குத் தந்தையானார் முன்னணி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.
கஞ்சா கருப்புவுக்கும், மதுரை மேலூர் அருகில் உள்ள கட்டானிப்பட்டியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சங்கீதாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பின் சங்கீதாவும் கஞ்சா கருப்பும் சென்னை ஆலப்பாக்கத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில் சங்கீதா கர்ப்பமானார். பிரசவத்துக்காக, அவர் தாய்வீடு சென்றார். நேற்று அதிகாலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். காலை 9-30 மணிக்கு சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
சென்னையில் படப்பிடிப்பில் இருந்த கஞ்சா கருப்பு, குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் மதுரைக்கு விரைந்தார். மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்த அவர், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

No comments:
Post a Comment