நடிகை ரேவதிக்கு அவரது கணவர் சுரேஷ் மேனனின் அண்ணின் விவாகரத்து மனைவி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை ரேவதியின் கணவன் சுரேஷ் மேனன். அவரது சகோதரர் சதீஷ் மேனன். அவர் தனது மனைவி ஆஷா பணிக்கரை விவகாரத்து செய்துவிட்டார். அவர்களுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உதய்(23) தந்தையின் பராமரிப்பில் உள்ளார். ஆஷா எழும்பூரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பராமரிப்புச் செலவுக்கு பணம் கேட்டும் சதீஷ் மேனன், சுரேஷ் மேனன் மற்றும் நடிகை ரேவதி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஆஷா.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது,
எனது மகனை சதீஷ் சரியாக கவனிக்கவில்லை. அவனுக்கு உரிய மருத்துவம் செய்வதில்லை. மேலும் அவனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதனால் என் மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். மூதாதையர் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் சதீஷ் தொழில் செய்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு விட்டது. அதில் கிடைத்த பணத்தில் எனது மகனுக்கு பங்கு தரவில்லை. அவ்வாறு தருவதற்கு ரேவதியும், அவரது கணவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே, எனது மகன் பெயரில் நாலரை கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அவனது பெயரில் ஒன்றை கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஃபிளாட்டும், ஒரு காரும் வாங்கித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment