மதராசபட்டனம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்ஸன். அந்த படத்தில் வெள்ளைக்கார பெண்ணாக நடித்திருந்த ஏமி, ஆர்யாவுக்கு காதலியாக நடித்திருந்தார். ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வர்ணிக்கப்பட்ட ஏமி, அடுத்து பாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளார். டைரக்டர் கவுதம் இயக்கத்தில் உருவாகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக்கில் கமிட் ஆகியிருக்கும் ஏமி, கவுதமுடன் வேலை செய்ய காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
டைரக்டர் விஜய் அழைப்பின் பேரில் தெய்வ திருமகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த ஏமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், மும்பையில், விரைவில் இந்தியில் படமாக்கபட உள்ள விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிக்க போகிறேன். இந்தியில் நான் நடிக்க, என் பெயரை இயக்குனர் கவுதமிடம் சிபாரிசு பண்ணியதே இயக்குனர் விஜய்தான். கவுதமுடன் வேலை செய்ய ஆவலாக காத்திருக்கேன். அவர் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தை பதினைந்து முறை பார்த்திருப்பேன். பாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கும் எனக்கும் காதலா என்று கேட்கிறார்கள். நான் தமிழில் அறிமுகமான படத்தின் நாயகன் ஆர்யா. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம், என்றார்.

No comments:
Post a Comment