இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குடியாத்தம் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் எடுத்து வரும் ஒழுங்கு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. மாநில அரசு அதிகாரிகள் சிலர் ஆளுங்கட்சியினர் போல வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு செய்யாத மாநில அரசு அதிகாரிகளை ஆளுங் கட்சினர் மிரட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் வருவாய் துறையினர் தாக்கபட்டுள்ளனர். அங்குள்ள அதிகாரி குடும்பம் அழிக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர். தோல்வி பயத்தில் வழி தவறி நடக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். மாநில அரசு சொல்லிதான் மத்திய அரசு செய்து வருவதாக கருணாநிதி கூறி வருகிறார்.
இலங்கை தமிழர் மீது தாக்குதல் இந்தியா இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட்டது. மற்றும் மனு கொடுத்து மன்றாடியும் ஆயுத உதவி நிறுத்தபடவில்லை. இதுவும் தி.மு.க. வேண்டுதல் படிதானா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை ஆணையம், அமெரிக்கா செனட், இங்கிலாந்து எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் காமன்வெல்த் போட்டி முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காணவும் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கபடுகின்றனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி நிர்வாகிகள் மூர்த்தி சாமிக் கண்ணு மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment