தலைப்பை படித்ததும் நடிகர் சிம்பு, பெண்தானே தேட வேண்டும்; எதற்காக மாப்பிள்ளை தேடுகிறார் என்ற சந்தேகம் வந்திருக்கும். அவர் மாப்பிள்ளை தேடுவது தனது தங்கை இலக்கியாவுக்காக. நடிகர் டி.ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு, அண்ணன் கடமையை சரியாக ஆற்றும் விதத்தில் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறாராம். சரியான வரம் அமைந்ததும் தங்கையின் திருமணத்தை சிறப்பாக முடிக்க திட்டமிட்டிருக்கும் சிம்பு, அதன் பிறகுதான் தன் திருமணத்தைப் பற்றி யோசிப்பாராம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாராவை லவ்வோ லவ்வென்று லவ்விய சிம்பு, அந்த லவ் முறிவுக்கு பிறகு மனதை திடப்படுத்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்ட நயன்தாராவோ, இப்போது தன் புது காதலரான பிரபுதேவாவே கதியென்று கிடக்கிறார் என்பதும் தெரியும்தானே!
No comments:
Post a Comment