ஆண்டுதோறும் கோடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்யும் 'மோர் சேவை' இந்த ஆண்டும் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இலவச மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடை வெயிலில் வாடுவோருக்கு தாகம் தணிக்க இந்த சேவையை அவர் செய்து வருகிறார். தனது பெயரையோ அல்லது அறக்கட்டளை பெயரையோ பயன்படுத்தாமல் செய்து வரும் சேவை இது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் இந்த மோர் பந்தல் செயல் பட துவங்கும். இவ்வாண்டு சட்டமன்ற தேர்தல் நடந்ததால் சற்று தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா மண்டபத்தை ஒட்டி விசேஷ பந்தல் அமைத்து பாத்திரத்தில் மோர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினசரி 2000 லிட்டருக்கும் அதிகமாக இங்கு மோர் விநியோகிக்கப்படுகிறது. மிகத் தரமாகவும், சுத்தமாகவும் வழங்கப்படுவதால், அந்த வழியாக வருவோர் போவோர் அனைவரும் அங்கு சென்று மோர் அருந்துகிறார்கள்.
பொது மக்கள், ஊழியர்கள் தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பினரும் இங்கு மோர் அருந்திச் செல்கிறார்கள். இதற்காக தினமும் 200 லிட்டருக்கும் அதிகமாக தயிர் பயன்படுத்தப்படுகிறது.
ரஜினியின் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தின் முகப்பிலும் இதே போல மோர் பந்தல் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் மோர் வழங்கப்படுகிறது.
தில் மாங்கே 'மோர்'!

No comments:
Post a Comment