இன்று திரைக்கு வந்திருக்கிறது அப்பாவி. கௌதம்-சுஹானி புதுமுக ஜோடி நடித்திருக்கும் இப்படம் கோடை காலத்தை இன்னும் சூடாக்குகிற சங்கதிகளை உள்ளடக்கியது. ரகுராஜ் என்ற முன்னாள் பத்திரிகையாளர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அப்பாவியை சீயான் விக்ரமுக்கு திரையிட்டு காண்பித்தாராம் ரகுராஜ். விக்ரம் என்ன சொன்னார் என்பதை கடைசியில் பார்க்கலாம். படம் எதை பற்றியது? கொடூர அரசியல்வாதிகளிடம் சிக்கிக் கொண்டு அப்பாவி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை பற்றியது. அவ்வளவு படித்த அதிகாரியை எட்டாங்கிளாஸ் கூட தாண்டாத அமைச்சர்கள் எடுபிடியாக பயன்படுத்துகிறார்களே என்று வேதனைப்படும் இளைஞன் எடுக்கிற முடிவுதான் படம்.
அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள் எப்படியிருக்கணும், எப்படி இருக்கக் கூடாது? என்பதையும் வலியுறுத்துகிறாராம் ரகுராஜ். இந்த கருத்தையெல்லாம் பார்த்த விக்ரம்தான் அப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதை சொன்னால் இப்போது அதிகாரத்திலிருப்பவர்களுக்கு விக்ரம் மீது கோபம் வருமே. அதனால் விட்டு விடலாம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்த படத்தை சரியான நேரத்துக்கு ரிலீஸ் பண்ணியிருக்கீங்க என்றாராம் விக்ரம்!
No comments:
Post a Comment