அஜீத் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மங்காத்தா படத்தின் பாடல் வெளியீடு சில பல பிரச்சனைகளால் மீண்டும் தள்ளிபோகிறது.
க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத், அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி, லெட்சுமிராய் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் மங்காத்தா படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தை அஜீத் பிறந்தநாளான மே-1ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் படத்தின் சூட்டிங் நிறைவு பெறாததால் படம் தள்ளி போகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அஜீத்தின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அஜீத் பிறந்தநாளில் படத்தைதான் ரிலீஸ் செய்யமுடியவில்லை ஆடியோவையாவது ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியிருந்தனர். இப்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் முடியாதது மற்றும் சில, பல பிரச்சனைகளால் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் ஆடியோ ரிலீசாகாது என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment